தொல்காப்பியக் கருத்தரங்கு – 4
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம் மன்றத்தின் கனடாக்கிளை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஜுலை மாதம் இடம்பெறவுள்ள நான்காவது கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
‘பெண்கள் பற்றிய தொல்காப்பியக் கருத்தாக்கமும் அதன் தாக்கமும்’
கருத்துரை வழங்குவோர்:
1) முனைவர். பார்வதி கந்தசாமி
(ரொறன்ரோ, யோர்க், ஸ்ரண்போர்ட் பல்கலைக்கழகங்களின் முன்னைநாள் பேராசிரியர், யாழ் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னைநாள் விரிவுரையாளர், வசந்தம் உளவள நிலைய அமைப்பாளர்)
2) கவிஞர் மீரா இராசையா M.A.
(அண்ணாமலைப் பல்கலைக்கழக முனைவர் பட்டப்படிப்பு மாணவி, முன்னைநாள் விரிவுரையாளர்)
நாள்: சனிக்கிழமை, ஜுலை 09, 2016
நேரம்: பிற்பகல் 3:00 மணி முதல் – 5:00 மணி வரை
இடம்: Unit 3A – 5637, Finch Avenue East, Scarborough, M1B – 5K9
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.
நிகழ்வு சரியாக பி.ப. 3:00 மணிக்குத் தொடங்கும் என்பதை அறியத்தருகின்றோம்.