தொல்காப்பியக் கருத்தரங்கு – 9

அன்புடையீர்,

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம் மன்றத்தின் கனடாக்கிளை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஒன்பதாவது கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

‘திருமணம் பற்றிய தொல்காப்பியர் கோட்பாடுகளும் அவற்றிற்கான பின்புலமும்’
முனைவர் திருமதி. செல்வநாயகி ஸ்ரீதாஸ்
(விரிவுரையாளர், நிருவாகி, அண்ணாமலை கனடா வளாகம்)

‘திருமண முறைகள்: தொல்காப்பியர் காலந்தொட்டு இன்றுவரை’ – ஒரு பார்வை
திரு. த.சிவபாலு B.Ed.Hons, M.A.

நாள்: சனிக்கிழமை, மார்ச் 11, 2017
நேரம்: முற்பகல் 9.30 மணி முதல் – 11:30 மணி வரை
இடம்: அண்ணாமலை கனடா வளாகம்
              1240 Ellesmere Road, Scarborough, ON. M1P 2X4 (Ellesmere & Brimley)

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

நிகழ்வு சரியாக முற்பகல் 9.30 மணிக்குத் தொடங்கும் என்பதை அறியத்தருகின்றோம்.

You may also like...