இலங்கையிலும் கனடாவிலும் தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்த கல்வியாளர் அமரர் சபா. அருள் சுப்பிரமணியம்அவர்கள்.
எஸ். கே. குமரகுரு
தோன்றின் புகழொடு தோன்றுக என்பது குறள். மாறாக தனது இடைவிடாத முயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு என்பனவற்றால் இலங்கையிலும் கனடாவிலும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தியவர்ளூ புலரும் பொழுதெல்லாம் தமிழ்ச்சிறார்களின் கல்விக்கே என்று வாழ்வின் பெரும் பகுதியை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்த கல்வியலாளர.; எப்படிக்கற்பிக்க வேண்டும், அதற்காக எவற்றையெல்வாம் கற்றுகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அறிந்து தன்னைத்தயார்படுத்தி ஆசிரியராகத் திகழ்ந்தவர் அமரர் சபா. அருள்சுப்பிரமணியம் அவர்கள்.
தமிழ்மொழி மீதும், கனடா, ஐரோப்பிய நாடுகளில் வளரும் எம்குழந்தைகளின் தமிழ் மொழியின் அறிவை வளர்ப்பதிலும் பேரார்வம் கொண்டவர். ஆசிரியர், அதிபர் ஆகிய கல்விசார் பதவிகளுடன் கவிஞர், நாடக ஆசிரியர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, இலக்கிய ஆர்வலர், ஆய்வரங்கச் செயல்பாட்டாளர், சமூக சேவையாளர், என பல்வேறு செயற்பாடுகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு கடந்த ஐம்பந்தைந்து வருடங்களாக செயற்பட்டவர்
அமரர் கல்வியலாளர,; கவிஞர,; இனப்பற்றாளர் என்பற்றுக்கு அப்பால் அவர் சாரணர் இயக்கத்தில் இணைந்து முழுமையாகப் பயிற்சி பெற்ற ஒரு சாரண வீரர் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். எப்போதும் நகைச்சுவையாகப் பேசுவார். மிகச் சிறந்த பண்பாளர், மனித நேயம் மிக்கவர். பணிவும் தன்னடக்கமும் கொண்டவர் அத்துடன் இரக்க சுபாவம் மிக்கவராகவும் திகழ்ந்தவர்.
பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் ஆரவம்மிக்கவர். திருக்குறனையும் திருவள்ளுவர் சிந்தனைகளையும் தமக்குள் உள்வாங்கிக் கொண்டவர் ஏற்றுக் கொள்ளும் பொறுப்புக்களை நேர்த்தியாக செய்து முடிக்கும் திறமை கொண்டவர். நீதிக்கா எப்போதும் குரல் கொடுப்பார். தனது மனச்சாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யமாட்டார். எடுப்பார் கைப்பிள்ளையாக அவர் எப்போதும் இருந்ததில்லை.
கல்வியும் ஆசிரியப் பணியும்
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்னும் குறள் 400 அமைய மாணவர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவதற்காக 1968ம் ஆண்டு தனது இருபத்தி நான்காவது (24) வயதில், இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள வட்டக்கொட என்னும் இடத்தில் அமைந்த பாடசாலைக்கு தோட்டப்பாடசாலை ஆசிரியராக நியமனம் பெற்று ஆசிரியர் சேவையில் தன்னை இணைத்துக் கொண்டவர.; ஆசிரியத் தொழிலைத் தொண்டாகவும், தொழுகையாவம் கடைப்பிடித்தவர். இரண்டு ஆண்டுகளின் பின்பு 1970ம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பயிற்சியின் பின்பு பயிற்றப்பட்ட ஆசிரியராக நியமனம் பெற்று மீண்டும் 1972ம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள பரிசுத்த திருத்தவத் கல்லூரியில் (ர்ழடல வுசinவைல ஊழடடநநபந) ஆசிரியப் பணியில் ஈடுபட்டார். இந்த வேளை இடம்பெற்ற தமிழ்தினப் போட்டியில் அமரர் எழுதி நெறிப்படுத்திய முதற்பரிசு எனும் நாடகம் நுவரெலியா மாவட்டத்தில் முதற்பரிசு பெற்றது வரலாற்று நிகழ்வாகும்.
தொடர்ந்து நுவரெலியா கதிரேசன் கனிஷ்ட பாடசாலை, நாவலப்பிட்டி, கொழும்பு கொட்டாங்சேனையில் அமைந்திருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்பனவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலத்திலேயே பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவனாக தன்னைப் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் கல்விகற்று கலைமானிப் பட்டத்தைப் (டீயு) பெற்றுக் கொண்டார்.
மரபுக்கவிதை புனையும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பண்டித வகுப்புக்களில் கலந்து புகழ்பெற்ற ஆசிரியர்களான செவாலியர் வித்துவான் அமுது அடைக்கலமுத்து, வித்துவான் பொன்.கந்தசாமி, பண்டிதர் இராமலிங்கம் ஆகியோரிடம் யாப்பிலக்கணம், சங்க இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்
இலங்கையில் 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தால் சகலதையும் இழந்து சொந்த ஊரான மாதகல்லுக்கு இடம்பெயர்ந்து, இரண்டாண்டுகள் யாழ்ப்பாணம் கொழும்பு என அலைந்து இறுதிகயாக 1985ம் ஆண்டு மாதகல் புனித ஜோசப் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். ஓராண்டின் பின் அதிபராக பதவியுயர்வு பெற்று ஏழு ஆண்டுகள் பணியாற்றிய பெருமைக்குரியவர். ஈழவிடுதலைப் போராட்டம் முணைப்பு பெற்றிருந்த அக்காலகட்டத்தில் பாடசாலை மணவர்களும், ஆசிரியர்களும், அதிபர்களும் பல நெருக்கடிக்கு உள்ளானார்கள். தொடர்ச்சியான தொல்லைகளைத் தாங்கமுடியாது தனது இருபது வருட சேவையின் பின்பு ஓய்வுபெற்று கனடாவிற்கு வருகைத்தந்தார்.
தனது பதவிக் காலத்தில் வெறுமனே பாடத்திட்டக் கல்விகளைப் போதிப்பதுடன் நின்றுவிடாது பாடத்திட்டத்துக்குப் புறம்பான கல்வி நடவடிக்கைகளிலும் மாணவர்களைப் ஈடுபடச் செய்து, பயிற்றுவித்து, ஆளுமை மிக்க மாணவர்களை உருவாக்கினார். குறிப்பாக மாணவர்களை நாடகம் நடித்தல் கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்ற பல போட்டிகளில் பங்குபெறச் செய்தார்.
அமரர் சபா.அருள்சுப்பிரமணியம் அவர்கள,; அண்ணாமலைப் பல்கலைக் கழகதில்; (சிதம்பரம் தமிழ்நாடு) தமிழ் முதுமானிப்பட்டம் எம்.ஏ பெற்றவர். இதன் மூலம் தனது தமிழ்மொழிப் புலமையை மேலும் வளர்த்துக்கொண்டவர்.
ஈழப்போர் முடிவுற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு இரண்டாண்டுக்கு ஒருதடவை சென்றுவந்தவர். அங்கு வாழும் ஆதரவற்ற குழந்தைகளின் மீது அளவற்ற இரக்கம் கொண்டவர். அவர்களின் நலனுக்காக நிறைய பண உதவி வழங்கியதுடன் அம்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றியவர். துணைவியார் யோகா அக்காவுடன் உரையாடும்போது எப்போதும் மதியம் பன்னிரண்டு மணிக்கு சாப்பிட்டு பழக்கப்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் மதிய உணவை மறந்து எதிலும் ஆர்வமற்று சோர்வுடன் இருந்ததை நினைவு கூர்ந்தார். தாய் மண்ணின் மீதும் குறிப்பாக தன் மாதகல் கிராமத்தின் மீதும் அளவற்ற பற்றாளனாக, மாதகல் மண்ணின் மைந்தனாக விளங்கியவர்.
இல்லற வாழ்வு
வாழ்க்கை துணைவியாக அனைவராலும் யோகா என அன்பாக அழைக்கப்படும் யோகசக்தி அவர்களை கரம்கோர்த்தவர். அசோக், அருண், பாவு ஆகிய மூன்று ஆண் மக்களைப் தனது வாரிசாப் பெற்றவர். எட்டுப் பேரக் குழந்தைகளின் பேரனாக மகிழ்ச்சியாக வாழ்ந்தவர். யோகா அக்கா தனது கணவனைப் பற்றிக் கூறும்போது, தனது தந்தையின் பிரிவின் பின்பு தனது முழுக் குடும்பத்தையும் பொறுப்பேற்று வழிநடத்தியவர் என்று பெருமையாகக் கூறினார். அமரர் அவர்களுக்கு பக்க பலமாக விளங்கியவர் யோகா அக்கா. அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் யோகாக் கலையில் முதுமானியப் பட்டம் பெற்றவர். தமிழ்ப் பூங்காவின் அதிபராகவும் சிறந்த நிருவாகியாகவும், பணியாற்றுகின்றார். மேலும் கனடா தமிழ் ஈழச்சங்கம், கனடா தொழில்நுட்பக் கல்லூரி என்பனவற்றில் சிரேஸ்ர வேலை தேடும் ஊக்குவிப்பாளராகப் பணியாற்றியவர்.
கனடாவில் தமிழ்ப்பணி
மொன்றியல் தமிழர் ஒளியில் தொடங்கிய தமிழ்ப்பணி
1992ம் ஆண்டு குடிவரவாளராக மொன்றியால் மாநகரில் தன் மனைவியுன் இணைந்து கொண்டவர். தமிழ் மொழி கற்பிக்கும் பணியைத் தொடங்கினார். மொன்றியால் தமிழ் ஒளி அழைப்பானது மிகவும் பழமையான ஒரு அமைப்பாகும். மொன்றியாலில் ஈழத் தமிழரால் உருவான முதல் தமிழ் அமைப்பு இதுவாகும். இதில் செயலாளராகப் பணியாற்றிய தனது மனைவி யோகா அவர்களுடன் இணைந்து முறையாக தமிழ்மொழியை கற்பிக்க வழி வகுத்தார். அதாவது கற்பித்தலுக்கு தேவையான பாடத்திட்டங்களைத் தயாரித்து தேவையான பயிற்சிப் புத்தகங்களையும் பெற்று தரத்துக்கேற்ப மாணவர்களை வகைப்படுத்தி தமிழ் கற்பித்தார். மேலும் இதே காலப்பகுதியில் கியூபெக் சைவ மகா சபையுடன் இணைந்து பல சமூக சேவைகளைச் செய்தமையும் என்றும் மறக்க முடியாததாகும்.
தமிழ் பூங்கா ஸ்தாபகர்
1997ம் ஆண்டு ரொறன்ரோவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்த அமரர் அவர்கள் அதே வருடம் தனது மனைவியுடன் இணைந்து தமிழ்ப்பூங்கா பாடசாலையை நிறுவினார். ஆரம்பத்தில் சிறு இடத்தில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று சொந்தப் பணிமனையில் இயங்கி வருகின்றது. பல ஆசிரியர்களுடன் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ்மொழியை கற்கின்றார்கள். கட்டிட உரிமையாளர் வாடகையை பல மடங்கு உயர்த்திய போது அதிகரித்த செலவை ஈடு செய்ய முடியாது சிரமப்பட்ட போது, பாடசாலையை மூடிவிடலாம் என்ற மனைவியின் ஆலோசனையைப் புறம் தள்ளி தனது தமிழ்ப் பணியை தொடர்ந்து முன்னெடுத்த தமிழ் பற்றாளர்.
பல சோதனைகளைக் கடந்து வந்த தமிழ்ப் பூங்கா நிறுவனம் தமிழ்மொழியை போதிப்பதுடன் மேலும் பல சேவைகளை தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்றிவருகின்றது. குறிப்பாக யோகா வகுப்புகள், தமிழ் வாசிப்பு, ஆங்கில வகுப்பு, இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்புகள் போன்ற பல சேவைகள் வழங்கப்படுகின்றன. இவை யாவற்றையும் ஒருங்கிணைத்த பெருமை அமரரையே சாரும்.
மேலும் அமரர் ரொறன்ரோ கத்தோலிக்க மாவட்ட கல்விச் சபையின் பகுதி நேர தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றியவர். கனடா தமிழ் தொழில்நுட்பக் கல்லூரி மூலம் உயர்வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழி சான்றிதழ் பெறுவதற்கான பாடத்திட்டத்தைப் போதித்தவர். இப்பணியின் மூலமாக பல தமிழ் மாணவர்களை தமிழ்மொழியில் திறமை மிக்கவர்களாக உருவாக்கிய பெருமைமிக்க நல்லாசிரியராவார். கனடா தமிழ் தொழில்நுட்பக் கல்லூரி நடத்தும் சகல நிகழ்வுகளிலும் தனது மாணவர்களை நாடகம், பேச்சு, கட்டுரை, கவிதை வாசிப்பு என சகல நிகழ்வுகளிலும் பங்குபற்ற வைத்து மாணவர்களின் ஆளுமையை வெளிக்கொணர்வார்.
கனடா அறிவகம் பொறுப்பாளர்.
2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை கனடா அறிவகம் பொறுப்பாளராக இருந்து பல நல்ல திட்டங்களை செயற்படுத்தியவர். பாடநூல்கள் தயாரித்தல், ஆசிரியர்களுக்கான பயிற்சியளித்தல் ஆகியவற்றை சிறப்பாக மேற்கொண்டவர்;;;;. தமிழ்நாடு, பிரான்ஸ், சிங்கப்பூர், ஆகிய நாடுகளில் இருந்து கல்வியலாளர்கள், அறிஞர்கள் எனப் பலரை அழைத்து கருத்தரங்குகள், மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்றி வழங்கி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை வளர்த்தவர். மேலும் அறிவகத்தில் நூல்நிலையம் ஒன்றை அமைத்து புத்தகங்களை ஒழுங்கு முறைப்படி வைப்பதற்கு அயராது உழைத்த பெருமகனாவார். தொடர்ச்சியாக ஐம்பத்தைந்து (55) ஆண்டுகள் ஆசிரிய சேவை மூலம் கல்விப்பணியாற்றிய பெருந்தகை குறிப்பாக உலகின் பல நாடுகளில் வளரும் தமிழ்ச்சிறார்களின் தமிழ் மொழி ஆற்றலை வளர்ப்பதற்கு அல்லும் பகலும் அயராது உழைத்த கல்வியலாளர்.
கனடா தொல்காப்பிய மன்றத் தலைவர்
கனடா தொல்காப்பிய மன்றத்தின் தலைவராக இறக்கும் வரைப் பணியாற்றியவர். 2015ம் ஆண்டு தொல்காப்பிய மன்றம் தொடங்கிய போது செயலாளராகவும் பின்பு தலைவராகவும் பதவி வகித்தவர். தொல்காப்பிய மன்றம், மாணவர்கள் மத்தியில் நடத்திய தமிழ்த் திறன் போட்கள் அனைவரதும் கவனத்தை ஈர்த்த ஒன்றாகும். பெருவாரியான மாணவர்கள் பங்கு பற்றினர். போட்டிக்குத் தேவையான வினா விடைகள் அடங்கிய கைநூல்கள் தயாரிப்பது முதல், போட்டி நடத்தி, வெற்றியாளர்களை தெரிவு செய்வது வரையான. சகல பணிகளையும் நேர்த்தியாக செய்து முடிப்பார்; பொறுப்புக்களை அனைவரிடமும் பகிர்ந்து கொடுத்து, மேற்பார்வை செய்து தேவையானபோது ஆலோசனை வழங்கி எடுத்த பணியைச் செய்து முடிக்கும் திறமைவாய்ந்தவர். மேலும் தொல்காப்பிய மன்றத்தின் செயற்குழு கூட்டங்களை நடத்துவதற்கு தமிழ்பூங்காவை எப்போதும் வழங்கியவர்.
மேலும் தொல்காப்பிய மன்றம் மாதம் தோறும் நடத்தி வந்த தொலகாப்பியக் கருத்தரங்குக்கு தேவையான உரையாளர்களை ஒழுங்கு படுத்துவது, இளைஞர்களை பங்குபற்றச் செய்தல் போன்ற பல விடயங்களை செய்து முடிப்பார்.
தொல்காப்பிய மன்றத்தில் அவருடன் சேர்ந்து நானும் பொருளாளராகப் பணியாற்றியது ஒரு பேறாகவே கருதுகின்றேன். அவருக்கும் எனக்குமான தொடர்பு மொன்றியால் நகரத்தில் இருக்கும் போது ஏற்பட்டது. எனது இரண்டு பிள்ளைகளின் தமிழ் ஆசிரியரும் அவரே. மேலும் எனது மனைவி அறிவகத்தில் தமிழாசிரியராக கடமையாற்றியதும் அவர் அறிவகப் பொறுப்பாளராக இருந்த காலகட்டத்திலாகும்
இந்த நீண்ட காலத் தொடர்பினூடாக நான் அவரிடம் பார்த்த விடையங்கள் பல. இருந்தும் சிலவற்றைக் குறிப்பிடலாம் என எண்ணுகின்றேன். கடமையுணர்வும் ஏனையோரை மதிக்கும் மனிதப் பண்பும் மறக்க முடியாதவை. கடந்த பெருந்தொற்றால் உலகமே முடங்கியது யாவரும் அறிந்ததே. அந்த வேளையில் தொல்காப்பிய போட்டிக்கு கையேடு தயாரித்த அச்சகத்தாருக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது வங்கிகள் இயங்கவில்லை. இயங்கும் குறுகிய நேரத்தில் என்னை வங்கிக்கு வரவளைத்து பணத்தை பெற்று, அவரே உரியவரிடம் சேர்த்த கடமையுணர்வையும், மனிதப் பண்பையும் எவ்வாறு விபரிப்பது?
ரொறன்றோ மாநகரம் பரபரப்பாக இயங்கிய காலங்களில் நடைபெற்ற சகல நிகழ்வுகளிலும் குறிப்பாக தமிழ் ஆய்வரங்குகள், முத்தமிழ் விழாக்கள் என அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு பற்றிச் சிறப்பிப்பார். இங்கு வசித்து வரும் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், சமுக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் என அனைத்து தரப்பினருடனும் உறவைப் பேணியவர். போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியவர். மேலும் தமிழ் மரபுத்திங்கள் அமைப்பினருடன் தொடக்க காலத்தில் இருந்தே திரு. நீதன் சண்முகராஜா அவர்களுடன் இணைந்து தமிழ் மரபுத் திங்கள் மாதத்தை சிறப்பாகக் கொண்டாடியவர். மாநகர சபை முதல் மத்திய சமஷ்டி அரசு வரை மரபுத்திங்களை அங்கீக்ரிப்பதற்கு அனைவருடனும் சேர்ந்து உழைத்த தமிழ்ப் பற்றாளர், தமிழ் அறிஞர் ஆவார்.
படைப்பிலக்கிய கர்த்தா
அருள் மணி, மாதகலான் ஆகிய புனை பெயர்களில் கவிதைகள், சிறுவர் பாடல்கள், குட்டிக் கதைகள் எனப் பல்வேறு படைப்புக்களை ஆக்கி வெளியிட்டவர். அமரர் சபா. அருள் சுப்பிரமணியம் அவர்கள். அவர் வெளியிட்ட சிறுவர் பாடல் நூல்களாக தமிழர்மலர் சிறுவர் பாடல்கள், பாடியாடு பாப்பா, தங்கக் கலசம், பாடலும் ஆடலும் ஆகிய நான்கைக் குறிப்பிடலாம் மற்றும் சிறுவர்களுக்கான ஒளியிழைத் தொடர் (னுஏனு) தமிழ் மலர் பாகம் ஒன்று, இரண்டு, மூன்று ஆகும் மற்றும் சிறுபாடல் இறுவெட்டுகள் (ஊனு) இரண்டு தொகுதி ஒன்று தமிழ் மலர் சிறுவர் பாடல்கள,; இரண்டு பாடுவோம் ஆடுவோம் என்பனவாகும்.
சிறுவர் நாடகங்களாக குட்டி நாடகங்கள், சிறுவர் நாடகங்கள் என்னும் இரண்டும் மற்றும் குட்டிக் கதைகளாக வரிக்குதிரை, கழுகு தூக்கிய பூனை, தொப்பென்று விழுந்த நாய் ஆகிய மூன்றுமாகும்.
வரலாற்றுப் பதிவுகளாக மாதகல் மான்மீயம், புடழசல ழக ஆயவாயபயட (ஆங்கில மொழிபெயர்ப்பு) கனடா 150, கனடா மரபுத்திங்கள் நூல்களைக் குறிப்பிடலாம். பாடநூல்களும் பயிற்சி நூல்களுமாகப் பின் வருவன அமைகின்றன. 1. தமிழ் படிப்போம், 2. பயிற்சி குறுக்கெழுத்து ஊடாக எழுத்து சொல் அறிமுகம் 3. பாடநூல்கள் (மாணவர் தரங்களுக்கு ஏற்றபடி: 1, 2, 3, 4, 5, 10.
மேலும் 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்கள் 1. ஒன்று பாடி ஆடு பாப்பா (சிறுவர் பாடல்களின் தொகுப்பு) 2. மாணவர்களுக்கான இலக்கண வினாவிடை 3. இலக்கண வினாவிடை. மேலும் வெளிவர இருக்கும் நூல் போர்க்காலப் பதிவுகள் (கவிதை).
இவற்றில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது. பாடி ஆடு பாப்பா தொகுப்பு நூலாகும். புகழ் பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களைப் போல் குழந்தைப் பாடல்களுக்காக ஈழத்தில் புகழ்பெற்றவர் கவிஞர் அமரர் சபா அருள் சுப்பிரமணியம். அன்னாரின் மேற்படி நூல் சில மாதங்களுக்கு முன்பு மெய்நிகர் ஊடாக வெளியிடப்பட்டது. 352 பக்கம் கொண்ட இந்நூல், பல பரிசுகளைப் பெற்றுக் கொண்டது. முக்கியமானதாகும்.
பெற்ற பரிசுகளும், விருதுகளும், பாராட்டுக்களும்.
2020 ஆண்டு வெளியிடப்பட்ட மேற்படி நூலுக்கும் அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறந்த நூலாகத் தெரிவு செய்து விருது வழங்கிக் கௌரவத்தது.
மேலும் தமிழகத்தில் வெளிவரும் கவிதை உறவு மாதாந்த சஞ்சிகை தனது 49ஆம் ஆண்டு விழாவில் பாடி ஆடு பாப்பா நாலுக்கு 2020ம், ஆண்டுக்குரிய குழந்தை இலக்கிய நூல்களில் இரண்டாவதாகத் தெரிவு செய்து பரிசாக ரூபா மூவாயிரம் வழங்கியதுடன், விருதுச் சான்றிதழும் வழங்கிக் கௌரவித்தது.
மேலும் கனடா தமிழ்க் கவிஞர் கழகம,; கவிஞர் சபா அருள்சுப்பிரமணியம் அவர்களின் அறுபது ஆண்டுகளாகத் தொடரும் தமிழ் ஆசிரியப் பணியையும், குழந்தை இலக்கியப் பணியையும் பாராட்டி 2021-07-10ம் திகதி குழந்தைக் கவி வித்தகர் எனும் விருது வழங்கிக் கௌரவித்தது.
மேலும் தமிழகத்தில் இருந்து வெளிவரும் தினமணிப் பத்திரிகை தனது 2021.09.01ம் திகதி இதழின் சிறுவர் மணி பகுதியில் பாடி ஆடு பாப்பா நூலையும், அதன் ஆசிரியரையும் பாராட்டி செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் கனடியப் பிரதமர் மான்புமிகு யஸ்ரின் ரூடோ அவர்களால் பாராட்டப்பட்ட பெருமைக்குரியவர். அதாவது கவிஞர் சபா. அருள்சுப்பிரமணியம் அவர்கள் 75ஆவது அகவையில் காலடி வைத்ததையிட்டு பிரதமர் வாழ்த்தி மகிழ்ந்தார். அவ்வாழ்த்துச் செய்தியை முன்னாள் ஐக்கி நாடுகள் நிறுவனத்தில் பணியாற்றிய வரும், சிறந்த சமூக சேவையாளருமான திரு அகஸ்டின் ஜீவானந்தம் அவர்கள் கவிஞரிடம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சிறந்த சமூக சேவையாளர்
அமரர் சபா அருள் சுப்பிரமணியம் அவர்கள் சிறந்த சமுக சேவையாளராவார். மண்ணின் மைந்தனாக எப்போதும் தன்னை முன்னிறுத்தியவர். கனடாவில் மாதகல் நலன்புரிச் சங்கத்தை ஆரம்பித்து அதனூடாக தாய் மண்ணில் பல சமூகப் பணிகளை ஆற்றியவர். சகல நாடுகளிலும் உள்ள மாதகல் மக்கள், மாதகல் நலன்புரிச் சங்கம் என்ற பெயரில் இயங்க வேண்டும் என்ன விருப்புடையவர். தனது விருப்பத்தை சுவிஸ் நாட்டில் மாதகல் நலன்புரிச் சங்கம் அமைத்து செயற்படுத்தியவர்.
2009ம் ஆண்டின் பின்பு இரண்டு ஆண்டுகளுக்கொரு தடவை முள்ளி வாய்க்கால் பகுதிக்கு விஜயம் செய்து அந்த மக்களின் துயர் துடைக்க அரும்பாடுபட்டவர். ஏழைச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னாலான உதவிகளைச் செய்தவர். தனது அடிப்படைத் தமிழ் இலக்கண நூலில் ஆயிரம் (1000) பிரதிகளை முள்ளிவாய்க்கால் பிரதேச மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியவர். மேலும் தான் நோயுற்றிருந்த போதும் தாயகத்திலுள்ள பல நிறுவனங்களுக்கு பெரும்தொகைப் பணம் வழங்கிய கொடையாளர். வறியார்க்கொன்று ஈவதே ஈகை குறள் 221 என்பதற்கமைய வறிய குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்த உதவிய நல்ல உள்ளம் படைத்த ஈகையாளர் வீட்டுத் தோட்டம், வாசிப்பு, எனும் இரண்டும் அவர் விருப்பத்துக் குரியனவாகும். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வாசிபதை மகிழ்வோடு செய்வார்.
ஆசிரியர் தொழிலை எப்போதும் தொண்டாகவும், தொழுகையாகவும் கொண்டு நல்லாசிரியராக, சிறந்த அதிபராக, நிர்வாக அதிகாரியாக, மனிதம் போற்றும் மகத்தான மனிதனாக சிறந்த கல்வியலாளராக, மண்ணின் மைந்தனாக, தமிழ் உணர்வாளராக, தாய் மண்ணின் விருதலையை நேசித்த இனப்பற்றாளராக வாழ்ந்தவர்.
எப்போதும் கலகலப்பாகவும் மனைவியுடனும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் அனைவருடனும் மிக அன்பைச் செலுத்தியவர். நோயுற்ற போதும் இறுதிவரைச் செயற்பட்ட ஒரு செயல் வீரராவார.; சிறந்த கல்வியலாளர், தமிழ் அறிஞர், குழந்தைக் கவி வித்தகர். சமூக செயற்பாட்டாளரின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். இருந்தும் அவர் இலட்சியங்களை, விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுப்பதே நாம் அவருக்குச் செய்யும் கைமாறாகும்.