மாதாந்தக் கருத்தரங்கு – நவம்பர் 2022

அன்புடையீர்,

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தொல்காப்பியம் பற்றிய சில அண்மைக்கால ஆய்வுகளும் மேற்கிளம்பும் சிக்கல்களும்
பேராசிரியர் அ. ஜோசப் சந்திரகாந்தன்

சங்க இலக்கியத்தில் உளவியல் ஒப்பீட்டாய்வு
– மருத்துவர் நந்தா காசிவிஸ்வநாதன்

திருக்குறள் முற்றோதல்
– செல்வி கம்சாயினி சாந்தகுமார்

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நாள்: சனிக்கிழமை, நவம்பர் 05, 2022
நேரம்: பிற்பகல் 3.00 மணி முதல் – 06:00 மணி வரை
இடம்: தமிழ் பூங்கா
              3001 Markham Rd Unit 21, Scarborough, ON M1X 1L6

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

நிகழ்வு சரியாக பிற்பகல் 3.00 மணிக்குத் தொடங்கும் என்பதை அறியத்தருகின்றோம்.

You may also like...