தமிழ்த் திறன் போட்டிகள் – 2025
எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள தொல்காப்பிய விழா -2025 இனை முன்னிட்டு மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன. இப்போட்டிகள் யாவும் 26-ஏப்பிரல்-2025 அன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் இடம்பெறும். இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் தொல்காப்பிய விழா மேடையில் வைத்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு...