மாதாந்தக் கருத்தரங்கு – ஓகஸ்ற் 2024

அன்புடையீர்,

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2024ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர். செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: குமுதினி பொன்னுத்துரை

தமிழ்க் கவிதை வடிவம் – தொல்காப்பியம் முதல் இன்று வரை
– Dr. தி. அமிர்தகணேசன் (அகன்)
கவிஞர் தொகுப்பாளர், பதிப்பாளர், சிற்றிதழ் ஆசிரியர் புதுச்சேரி

முல்லைப்பாட்டில் தொல்காப்பியக் கூறுகள்
– திருமதி புவனா கருணாகரன்
முதுகலைத் தமிழ் மாணவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். | அமெரிக்கா

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் சிறப்பு
செல்வன். அக்ஷ்ய் ஜெயபாலசிங்கம்
ரொறன்ரோ பல்கலைக்கழக மாணவர், கனடா

திருக்குறளில் அறம்
செல்வி. வர்ஷா இளையதம்பி
யோர்க் பள்ளி மாணவி, கனடா

நன்றியுரை: திரு. சி. சண்முகராஜா (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நாள்: சனிக்கிழமை, ஓகஸ்ற் 03, 2024
நேரம்: பிற்பகல் 6.00 மணி முதல் – 09:00 மணி வரை (கனடா நேரம்)
Join Zoom Meeting:
              Meeting ID: 361 993 2434
              Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

You may also like...