பொதுக்குழுக்கூட்டம் – 2024
தொல்காப்பிய மன்றம் – கனடா, பொதுக்குழுக்கூட்டத்திற்கும் செயலவை உறுப்பினர் தெரிவிற்குமான அறிவித்தல்
நாள்: 15 – 12 – 2024 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10.30 தொடக்கம் பிற்பகல் 1.30 வரை
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் (Scarborough Civic Centre, Room 1 & 2)
தற்போதைய செயற்குழுவின் ஈராண்டுக்காலம் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, 29 ஒக்ரோபர் 2024 இல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காகவும், செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் மன்றத்தின் யாப்பில் திருத்தம் மேற்கொள்வதற்காகவும் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இக்கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு, மூதறிஞர்குழு உறுப்பினர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நடைபெறவுள்ள பொதுக்குழுக்கூட்டத்தில் பங்குபற்றுவதற்கும், புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கும், புதிய செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், வாழ்நாள் உறுப்பினர்களும், ஆண்டு உறுப்புரிமையைப் புதுப்பித்துக்கொண்ட உறுப்பினர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.
ஆண்டு உறுப்புரிமையைப் புதுப்பித்துக்கொள்ளாத உறுப்பினர்களும், புதிதாக இணைய விரும்புவோரும், பொருளாளருடன் தொடர்புகொண்டு தங்கள் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிர்வாக நடைமுறை வசதியைக் கருத்திற்கொண்டு கனடாவில் வதியும் உறுப்பினர்களே செயற்குழு உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படுவார்கள் என்பதனையும் கவனத்திற்கொள்க.
நன்றி
முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்,
தலைவர்
(647-881-3613)
திரு. சண்முகராஜா சின்னத்தம்பி
செயலாளர்
(416-939-9171)
திருமதி கலாதேவி அரியராசா
பொருளாளர்
(647-869-8592)