தொல்காப்பியக் கருத்தரங்கு – 18
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம் மன்றத்தின் கனடாக்கிளை ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. மார்ச் மாதம் இடம்பெறவுள்ள பதினெட்டாவது கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
‘தொல்காப்பியம்தொட்டு தமிழிலக்கியங்கள் காட்டும் போர்முறைகள் – காஞ்சித்திணை’
முனைவர் திருமதி. செல்வநாயகி ஸ்ரீதாஸ்
(விரிவுரையாளர், நிருவாகி, அண்ணாமலை கனடா வளாகம்)
‘சங்ககால காஞ்சித்திணைச் செய்யுளுக்கான விளக்கவுரை’
திருமதி. ஜெயா அற்புதராஜா
***** இளையோரின் கவிதை ஒப்படைப்புக்களும் காணொளியுடன் கூடிய தமிழிலக்கிய ஒப்படைப்புகளும் இடம்பெறும். *****
நாள்: சனிக்கிழமை, மார்ச் 24, 2018
நேரம்: பிற்பகல் 3.00 மணி முதல் – 05:00 மணி வரை
இடம்: அண்ணாமலை கனடா வளாகம்
1240 Ellesmere Road, Scarborough, ON. M1P 2X4 (Ellesmere & Brimley)
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.
நிகழ்வு சரியாக பிற்பகல் 3.00 மணிக்குத் தொடங்கும் என்பதை அறியத்தருகின்றோம்.