தொல்காப்பியக் கருத்தரங்கு – 20
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம் மன்றத்தின் கனடாக்கிளை ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. மே மாதம் இடம்பெறவுள்ள இருபதாவது கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
“தொல்காப்பியம் – ஒரு பார்வை”
திரு. சு.தீனதயாளன் (சொல்லாக்கியன்)
(தொல்காப்பியம் – எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் நூல்களை ஆக்கியோன்) சட்ட வல்லுநர்
கருத்துரை:
முனைவர். திருமதி. செல்வநாயகி ஸ்ரீதாஸ்
மருத்துவர் செல்வி மேரி கியூரி போல்
***** மாணவர்களின் ஒளிப்படத்துடன் கூடிய இலக்கிய உரைகளும் இடம்பெறும். *****
நாள்: ஞாயிற்றுக்கிழமை, மே 13, 2018
நேரம்: பிற்பகல் 3.00 மணி முதல் – 05:00 மணி வரை
இடம்: அண்ணாமலை கனடா வளாகம்
1240 Ellesmere Road, Scarborough, ON. M1P 2X4 (Ellesmere & Brimley)
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.
நிகழ்வு சரியாக பிற்பகல் 3.00 மணிக்குத் தொடங்கும் என்பதை அறியத்தருகின்றோம்.