தொல்காப்பியக் கருத்தரங்கு – ஏப்ரல் 2019
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
“தொல்காப்பியத்தில் நகைச்சுவை”
பேராசிரியர் சு. பசுபதி அவர்கள்
மாணவர் ஆக்கங்கள்:
“கூத்துக் கலைகள்” – காணொளியுடனான விளக்கவுரை
செல்வி. மாதுமை நடராஜா
“கவிதை ஒப்படைப்பு”
செல்வி. வர்ஷினி
நகுலராஜா
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
நாள்: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019
நேரம்: பிற்பகல் 3.00 மணி முதல் – 05:00 மணி வரை
இடம்: அண்ணாமலை கனடா வளாகம்
1240 Ellesmere Road, Scarborough, ON. M1P 2X4 (Ellesmere & Brimley)
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.
நிகழ்வு சரியாக பிற்பகல் 3.00 மணிக்குத் தொடங்கும் என்பதை அறியத்தருகின்றோம்.