தொல்காப்பிய விழா போட்டிகள் – 2017
பேச்சு, மொழித்திறன் (சொற்பொருள் விளக்கம்) மற்றும் பொது அறிவுப் போட்டிகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
போட்டியாளர்கள் பின்வரும் ஒழுங்கு விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதும் முடிவானதுமாகும்.
- விண்ணப்ப முடிவுத் திகதி 30-04-2017 ஆகும்.
- பிரதேச வேறுபாடுகளின்றி அனைவரும் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
போட்டிகள் நடைபெறும் நாட்கள்: மே மாதம் 21 – 22 காலை 8.30 தொடக்கம்
போட்டிகள் நடைபெறும் இடம்: அண்ணாமலை கனடா வளாகம், 1240 Ellesmere Road, Scarborough, ON. M1P 2X4 (Brimley & Ellesmere)
பேச்சுப்போட்டி தவிர்ந்த ஏனைய போட்டிகளில் பங்கேற்போர், போட்டி ஆரம்பிக்கும் நேரத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது முன்னர் வந்து தங்கள் பங்கேற்றலை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
பேச்சுப்போட்டியில் பங்கேற்போர், போட்டி ஆரம்பிக்கும் நேரத்திற்கு குறைந்தது பத்து நிமிட நேரமாவது முன்னர் வந்து தங்கள் பங்கேற்றலை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
போட்டிகளின் நேரஅட்டவணையினை இங்கே பார்வையிடலாம்
போட்டிகள் பற்றிய மேலதிக விபரங்கள் போட்டியாளர்களின் தரப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மே மாதம் 13ம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்படும். மின்னஞ்சல் முகவரி இல்லாதவிடத்து தொலைபேசியூடாக அறிவிக்கப்படும்.
பேச்சுப் போட்டி
பேச்சுப் போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தினை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.
தொல்காப்பிய மன்றத்தினால் கொடுக்கப்பட்டுள்ள பேச்சினை மனனம் செய்து பேசுதல் வேண்டும்.
1) பிரிவு-1 (31-12-2010 இற்குப் பின் பிறந்தோர்)
2) பிரிவு-2 (2010ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
3) பிரிவு-3 (2009ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
4) பிரிவு-4 (2008/2007ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
5) பிரிவு-5 (2006/2005ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
6) பிரிவு-6 (2004/2003ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
7) பிரிவு-7 (2002/2001ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
மொழித்திறன் தேர்வு
மொழித்திறன் (சொற்பொருள் விளக்கப்) போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தினை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.
தொல்காப்பிய மன்றத்தினால் தயாரித்துக் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களோடு தமிழ்மொழி பற்றிய பொது அறிவு வினாக்களுக்கும் போட்டியாளர்கள் விடையளித்தல் வேணடும்.
1) பிரிவு-2 (2010ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
2) பிரிவு-3 (2009ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
3) பிரிவு-4 (2008/2007ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
4) பிரிவு-5 (2006/2005ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
5) பிரிவு-6 (2004/2003ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
6) பிரிவு-7 (2002/2001ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
பொது அறிவுப் போட்டி
பொது அறிவுப் போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தினை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.
தொல்காப்பிய மன்றத்தினால் தயாரித்துக் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களோடு தமிழ்மொழி பற்றிய பொது அறிவு வினாக்களுக்கும் போட்டியாளர்கள் விடையளித்தல் வேணடும்.
1) பிரிவு-1 (31-12-2010 இற்குப் பின் பிறந்தோர்)
2) பிரிவு-2 (2010ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
3) பிரிவு-3 (2009ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
4) பிரிவு-4 (2008/2007ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
5) பிரிவு-5 (2006/2005ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
6) பிரிவு-6 (2004/2003ஆம் ஆண்டிற் பிறந்தோர்)
7) பிரிவு-7 (2002/2001ஆம் ஆண்டிற் பிறந்தோர்)