நன்றி நவில்கிறோம்
பெருமதிப்பிற்குரிய பெற்றோருக்கு,
வணக்கம்!
கனடா தொல்காப்பிய மன்றம் 05-05-2019 அன்று நடத்திய மொழித்திறன் போட்டி நிகழ்வுகள் தடைகளைத் தாண்டி நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய உங்கள் ஒவ்வொருவருக்கும் எமது மனம்நிறைந்த நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
போட்டியன்று காலை திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடையால் போட்டிகளை Scarborough Civic Centre இல் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போய்விட்டது.
ஆயினும் எல்லோரது நேரத்தையும், சிரமங்களையும் சரிசெய்யும் வகையில் அன்று உடனேயே போட்டிகளைத் தமது வளாகத்தில் நடத்தப் பெருமனதோடு ஒத்துழைத்த அண்ணாமலை கனடா வளாக நிர்வாகத்தினருக்கும், கட்டட உரிமையாளருக்கும் இத்தால் உங்கள் சார்பில் கனடா தொல்காப்பிய மன்றம் தனது நன்றியறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.
போட்டிப் பெறுபேறுகள் இயன்றவரை விரைவில் இவ்வார இறுதிக்குள் எமது இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
தங்கள் மேலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.
நன்றி!!!
தொல்காப்பிய மன்றம் – கனடா