சிறுவருக்கான “தொல்காப்பிய விநாடி-வினா” நிகழ்ச்சி
அறிவித்தல் – #2 2024-08-07
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் சிறுவருக்கும் பெரியவருக்கும் என இரண்டு பிரிவுகளில் ‘தொல்காப்பிய விநாடிவினா’ (Quiz) பல்சுவை நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவருக்கான முதல் பிரிவில் தொல்காப்பியம் பற்றியும் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரங்களிலிருந்தும் அடிப்படைத் தமிழ் இலக்கணத்திலிருந்தும் சிறுவர்களின் நிலைக்கு ஏற்ப வினாக்கள் கேட்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிறுவர்களுக்கான ‘வினாக் கொத்தை’ இங்கே நீங்கள் தரவிறக்கிக்கொள்ளலாம். இவ்வினாக் கொத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட வினாக்கள் நிகழ்ச்சியில் கேட்கப்படும்.
விநாடி-வினா நிகழ்ச்சி Quizizz தளம் மூலம் பல்சுவை விளையாட்டாக
2024-09-21 சனிக்கிழமையன்று பிற்பகல் Scarborough Civic Centre முதன்மை அரங்கில் நடைபெறும். கட்டணம் ஏதும் இல்லை. வெற்றிபெறும் முதல் மூவருக்குப் பரிசும் பங்குபெறுவோருக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புவோர் https://forms.gle/DJB7DiZAxDQGKPw77 இணைப்பிலோ அல்லது QR குறியீட்டின் மூலமோ செப்டம்பர் 10, 2024ஆம் நாளுக்குள் பதிவுசெய்ய வேண்டும். பெரியவருக்கான அறிவித்தல் பிறகு வெளியிடப்படும். மேலதிக விவரங்களுக்கு: 647-881-3613 / 416-939-9171 / 647-850-0152
தகுதியும் விதிமுறைகளும்
- தகுதி: 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை (செப்டம்பர் 2024)
- சிறந்த இணையவசதி கொண்ட செல்பேசி (Mobile) / பலகைக்கணினி (Tab) கொண்டுவருதல்.
- விநாடி-வினா நடக்கும் நாள் 2024-09-21 சனிக்கிழமை பிற்பகல்.
- Quiziz செயலியை (App) நிறுவிக்கொள்ளுதல் (Install) வேண்டும்.
- பெற்றோர் அல்லது ஆசிரியர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கக் கடைசி நாள் 2024-09-10
இளையோரிடமும் தொல்காப்பியத்தின் பெருமையை எடுத்துச்செல்வோம் வாரீர்!