தமிழ்த் திறன் போட்டிகள் – 2024
எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன.
இப்போட்டிகள் யாவும் 11-மே-2024 அன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் இடம்பெறும்.
இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டு மேடையில் வைத்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு (இளமழலை [JK], முதுமழலை [SK]) 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன.
இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் படிவத்தினை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு போட்டிக்குமான உள்ளடக்கங்களைக் கீழே உள்ள அட்டவணையில் அந்தந்தப் போட்டிகளின் இணைப்பில் தரவிறக்கிக் கொள்ளலாம்.
பிரிவு | வகுப்பு | பிறந்த ஆண்டு | போட்டிகள் |
1 | JK | 2018 இற்குப் பின் | பேச்சு, படம் – கூறுதல் |
2 | SK | 2018 | பேச்சு, படம் – கூறுதல் |
3 | Gr – 1 | 2017 | பேச்சு, படம் – கூறுதல், படம் – எழுதுதல் |
4 | Gr – 2 | 2016 | பேச்சு, படம் – கூறுதல், படம் – எழுதுதல் |
5 | Gr – 3 | 2015 | பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை |
6 | Gr – 4 | 2014 | பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை |
7 | Gr – 5 | 2013 | பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை |
8 | Gr – 6 | 2012 | பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை |
9 | Gr – 7 | 2011 | பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை |
10 | Gr – 8 | 2010 | பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை |
11 | Gr – 9-12 | 2006 – 2009 | காணொளி ஒப்படை, படம் – எழுதுதல், வினாவிடை |
ஒரு போட்டியில் பங்கேற்பதற்குரிய கட்டணம் $20.00
இரு போட்டிகளில் பங்கேற்பதற்குரிய கட்டணம் $30.00
மூன்று போட்டிகளில் பங்கேற்பதற்குரிய கட்டணம் $35.00
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை tolcanada@gmail என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். விண்ணப்பங்களுக்குரிய கட்டணங்களை sridas@hotmail.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer செய்யலாம். E-transfer செய்பவர்கள் தகவற் பகுதியில் (Message) மாணவரின் பெயர் மற்றும் கல்வி கற்கும் தரம் ஆகியவற்றைக் குறிப்பிடவும்.
மேலதிக விபரங்களுக்கு: 647-881-3613 / 416-939-9171 / 647-850-0152
விண்ணப்பங்கள் 27/04/2024 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.