தமிழ்த் திறன் போட்டிகள் – 2025



எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள தொல்காப்பிய விழா -2025 இனை முன்னிட்டு மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன.
இப்போட்டிகள் யாவும் 26-ஏப்பிரல்-2025 அன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் இடம்பெறும்.
இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் தொல்காப்பிய விழா மேடையில் வைத்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு (இளமழலை [JK], முதுமழலை [SK]) 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன.
இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் படிவத்தினை நிரப்பிய பின்னர், உரிய தொகையினை comp@tolkappiyam.ca என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு e-transfer மூலம் அனுப்பி வையுங்கள். E-transfer செய்யும்போது, தகவற் பகுதியில் (Message) மாணவரின் பெயர் மற்றும் கல்வி கற்கும் தரம் ஆகியவற்றைக் குறிப்பிடவும்.
ஒவ்வொரு போட்டிக்குமான உள்ளடக்கங்களைக் கீழே உள்ள அட்டவணையில் அந்தந்தப் போட்டிகளின் இணைப்பில் தரவிறக்கிக் கொள்ளலாம்.
பிரிவு | வகுப்பு | பிறந்த ஆண்டு | போட்டிகள் | ||
1 | JK | 2019 இற்குப் பின் | பேச்சு | படம் – கூறுதல் | |
2 | SK | 2019 | பேச்சு | படம் – கூறுதல் | |
3 | Gr – 1 | 2018 | பேச்சு | படம் – கூறுதல் | படம் – எழுதுதல் |
4 | Gr – 2 | 2017 | பேச்சு | படம் – கூறுதல் | படம் – எழுதுதல் |
5 | Gr – 3 | 2016 | பேச்சு | படம் – எழுதுதல் | வினாவிடை |
6 | Gr – 4 | 2015 | பேச்சு | படம் – எழுதுதல் | வினாவிடை |
7 | Gr – 5 | 2014 | பேச்சு | படம் – எழுதுதல் | வினாவிடை |
8 | Gr – 6 | 2013 | பேச்சு | படம் – எழுதுதல் | வினாவிடை |
9 | Gr – 7 | 2012 | பேச்சு | படம் – எழுதுதல் | வினாவிடை |
10 | Gr – 8 | 2011 | பேச்சு | படம் – எழுதுதல் | வினாவிடை |
11 | Gr – 9-12 | 2007 – 2010 | காணொளி ஒப்படை | படம் – எழுதுதல் | வினாவிடை |
ஒரு போட்டியில் பங்கேற்பதற்குரிய கட்டணம் $20.00
இரு போட்டிகளில் பங்கேற்பதற்குரிய கட்டணம் $30.00
மூன்று போட்டிகளில் பங்கேற்பதற்குரிய கட்டணம் $40.00
விண்ணப்பங்கள் 15/04/2024 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலதிக விபரங்களுக்கு: 647-881-3613 / 647-850-0152